திமுக தலைவர் கருணாநிதி விரைவில் அண்ணா அறிவாலயம் வருவார்-துரைமுருகன்!

274

திமுக தலைவர் கருணாநிதி விரைவில் அண்ணா அறிவாலயம் வருவார் என்று, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உலக அக்குபஞ்சர் தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில், விசிக தலைவர் திருமாவளவன், திமுக துணை பொதுச்செயலாளர் துரைமுருகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், திமுக தலைவர் கருணாநிதி விரைவில் அண்ணா அறிவாலயம் வருவார் என்று கூறினார். கருத்து சுதந்திரத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டினார்