பெண் அதிகாரி நுழைந்தது பற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் | திமுக கூட்டணிக் கட்சிகள் கோரிக்கை

275

மதுரையில் வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்துக்குள் அதிகாரி நுழைந்தது பற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் எனத் திமுக கூட்டணிக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மதுரையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் வட்டாட்சியர் சம்பூர்ணம் நுழைந்தது பற்றியும், ஆவணங்கள் வைக்கப்பட்ட அறை முத்திரையிடப்படாமல் இருந்தது பற்றியும் உரிய விசாரணை நடத்தக்கோரி திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கூட்டாக இணைந்து மனு அளித்துள்ளன. சென்னையில் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரத சாகுவிடம் அளித்த மனுவில், தவறு செய்த அதிகாரிகள் மீதும், அதற்குக் காரணமானோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு முழுமையான துணைராணுவப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.