திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

135

திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். முதலமைச்சரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவது கண்டிக்கதக்கது என்று கூறிய திருநாவுக்கரசர், வதந்தி விவகாரத்தில் காவல்துறையினரும் தவறு இழைக்கக்கூடாது என்றும் கூறினார். காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை குறை கூறுவதை நிறுத்திவிட்டு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மேற்கொள்ளவேண்டும் என்று தெரிவித்த அவர்,
காவிரி பிரச்சனை குறித்து திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் என்று கூறினார்.