உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் பதவிகாலம் நீட்டிப்பிற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு..!

111

உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் பதவிகாலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கும் மசோதாவை சட்டமன்றத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016ஆம் ஆண்டு நிறைவடைந்தது. இதனிடையே வார்டு மறுசீரமைப்பு பணிகள் காரணமாக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தொடர்ந்து இழுப்பறி நீடித்து வருகிறது. இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் பதவிகாலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கும் மசோதாவை சட்டமன்றத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். மேலும் மாநகராட்சி மேயர்களை மீண்டும் மக்களே நேரடியாக தேர்வு செய்யும் முறையை அமல்படுத்தும் சட்டத் திருத்த மசோதாவும் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் நகராட்சி, பேரூராட்சி மன்ற தலைவர்களையும் மக்களே நேரடியாக தேர்வு செய்ய முடியும். கடந்த 2016ஆம் ஆண்டு மாநகராட்சி மேயர்களை கவுன்சிலர்கள் தேர்வு செய்யும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டநிலையில் தற்போதைய சட்டத்திருத்தம் தேவையற்றது என எதிர்கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்