காங்கிரஸ் நடத்தும் நாடு தழுவிய முழுஅடைப்புப் போராட்டத்துக்கு திமுக ஆதரவு..!

303

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, காங்கிரஸ் நடத்தும் நாடு தழுவிய முழுஅடைப்புப் போராட்டத்துக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து, நூறு ரூபாயை எட்டும் வகையில் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் வரும் 10ம் தேதி காங்கிரஸ் சார்பில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பாரத் பந்த் முழு அளவில் வெற்றி அடைய, திமுக அனைத்து வகையிலும் ஒத்துழைக்கும் என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், எரிபொருள் விலை உயர்வை கண்டுகொள்ளாத பாஜக அரசுக்கு பாடம் புகட்டுவோம் என்றும் தெரிவித்துள்ளார். பத்தாம் தேதி போராட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வியாபாரிகள், வர்த்தகர்கள், மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.