ஸ்டாலின் தலைமையில், திமுக எம்.பி.-க்கள் கூட்டம்..!

185

சென்னையில் நடைபெற்ற, மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்பிக்கள் கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர். பாலுவும், மக்களவை கொறடாவாக ஆ.ராசாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்பிக்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர். பாலுவும், துணை தலைவராக கனிமொழியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் திமுக மக்களவை கொறடாவாக, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு செய்யப்பட்டார். மாநிலங்களவை தலைவராக திருச்சி சிவா தேர்ந்தெடுக்கப்பட்டார். கனிமொழி வகித்து வந்த இந்த பதவி, தற்போது திருச்சி சிவாவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 19 எம்பிக்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் தீர்மான அறிக்கை வெளியிடப்பட்டது. 37 மக்களவை தொகுதிகளிலும் 13 சட்டமன்ற தொகுதியிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவை தொகுதியிலும் வெற்றியை தந்த தமிழ்நாடு மற்றும் புதுவை மக்களுக்கு, இக்கூட்டத்தில் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.