அதிகார பலத்தை முறியடித்து திமுக கூட்டணி வெற்றி பெறும்..!

243

பண பலம் மற்றும் அதிகார பலத்தை முறியடித்து, திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என மார்க்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், சிதம்பரத்தில் உள்ள வாக்கு மையத்தில் தனது மனைவியோடு வந்து வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த தேர்தலில் பணபலம், மற்றும் அதிகார பலத்தை முறியடித்து திமுக கூட்டணி அமோக வெற்றி பெரும் என கூறினார்.
தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாக்களிப்பதற்கு செய்யப்பட்ட வசதிகள் போதுமானதாக இல்லை என குற்றம் சாட்டிய பாலகிருஷ்ணன், வீ வீ பேட் பொருத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு , வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் தடைபட்டதையும் சுட்டிக்காட்டினார். இதையெல்லாம் சரிவர செய்யாமல், எதிர்க்கட்சிகள் மீதும், எதிர்கட்சி வேட்பாளர்கள் மீதும் சோதனை போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதில்தான், தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டியது என பாலகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.