பணபலத்தால், வென்றுவிடலாம் என அதிமுக நினைப்பது நடக்காது – முத்தரசன்

79

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை தொகுதி வேட்பாளர்கள் செல்வராஜ் மற்றும் திருப்பூர் சுப்புராயன் ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர்.

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளை ஒதுக்கப்பட்டுள்ள்ளது. திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் திருப்பூர் தொகுதியில் சுப்பராயன் மற்றும் நாகப்பட்டினம் தொகுதியில் செல்வராசு போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை தொகுதி வேட்பாளர்கள் செல்வராஜ் மற்றும் திருப்பூர் சுப்புராயன் ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலினை இன்று சந்தித்தனர்.

அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனும் உடன் இருந்தார். வேட்பாளர்கள் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், தேர்தலில் பணபலத்தால் வென்றுவிடலாம் என்ற அதிமுக நினைப்பது நடக்காது என்று கூறினார்.