திமுக இரட்டை வேடம் போடுகிறது : அமைச்சர் மணிகண்டன்

69

இரட்டை வேடம் போடும், திராவிட முன்னேற்ற கழகத்தை தமிழக மக்கள் தண்டிக்க வேண்டும் என அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசுக்கு நற்பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காக திராவிட முன்னேற்ற கழகம் செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார். மேலும், சமூக ஆர்வலர் என்ற பெயரில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டதால் தான் சில அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசை வழங்குவதற்கு நீதிமன்றம் தடை விதித்தது என்று அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.

தமிழக மக்களுக்கு எதிராக இரட்டை வேடம் போடும் திராவிட முன்னேற்ற கழகத்தை தமிழக மக்கள் தண்டிக்க வேண்டும் என்றும் அமைச்சர் மணிகண்டன் வலியுறுத்தினார்.