கருணாநிதி உடல் நலக்குறைவை தொலைக்காட்சியில் பார்த்த அதிர்ச்சில் திமுகவினர் 2 பேர் உயிரிழப்பு..!

426

கருணாநிதி உடல் நலக்குறைவை தொலைக்காட்சியில் பார்த்த அதிர்ச்சியிலும், வாட்ஸ்அப்பில் வந்த வதந்தியாலும் திமுகவினர் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத்நகரை சேர்ந்த தமீம் என்பவர் திமுக மாவட்ட பிரதிநிதியாக இருந்து வருகிறார். திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டதால், கவலையில் இருந்து வந்த அவர், மருத்துவமனையில் கருணாநிதி சேர்க்கப்பட்ட செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துள்ளார். இதனையடுத்து, தனது வேதனையை வெளிப்படுத்தியபடி இருந்த தமீமுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமீம், மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். இதேபோல, நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த ஒடுவன்குறிச்சியை சேர்ந்த மளிகை வியாபாரி சிவசண்முகம் என்பவர் வாட்ஸ்அப்பில் கருணாநிதி பற்றி வந்த வதந்தியை பார்த்ததை அடுத்து, நெஞ்சு வலிப்பதாக கூறி, மயங்கி விழுந்து உயிரிழந்தார்.