திமுக தலைவர் கருணாநிதியின் வெண்கல சிலை : அறிஞர் அண்ணாவின் சிலை வடிவமைப்பு

152

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் வெண்கல சிலை நிறுவப்பட்டது.

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெண்கல சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் முடிவு செய்யப்பட்ட நிலையில், கருணாநிதி சிலை நிறுவப்பட்டது. இதே போல் அண்ணா சிலையும் புதிதாக நிறுவப்பட்டுள்ளது. மேலும் 114 அடி உயரமுள்ள கொடி கம்பமும் அண்ணா அறிவாலயத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ளது.இவற்றை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். வரும் 16ம் தேதி இரண்டு பேரின் சிலைகளையும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கிறார்.