மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் தே.மு.தி.க. பின்னடைவை சந்தித்துள்ளது…

150

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் தே.மு.தி.க. பின்னடைவை சந்தித்துள்ளது.

தமிழகத்தில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், தே.மு.தி.க. 4 தொகுதிகளில் போட்டியிட்டது. வட சென்னை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விருநகர் ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட்டதில், 4 தொகுதிகளிலும் தே.மு.தி.க. பின்னடைவை சந்தித்துள்ளது.

இதேபோன்று, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி பா.ம.க. 7 தொகுதிகளில் போட்டியிட்டது. தருமபுரி, விழுப்புரம், அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 7 தொகுதிகளில் போட்டியிட்டதில், தருமபுரி தொகுதியில் மட்டுமே அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.