பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தேமுதிகவின் பொதுக்குழு இன்று காரைக்குடியில் நடைபெற உள்ளது..!

330

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தேமுதிகவின் பொதுக்குழு இன்று காரைக்குடியில் நடைபெற உள்ளது.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட தேமுதிக சட்டமன்றத்தில் 2வது பெரிய கட்சியாக உருவெடுத்தது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரானார். இதனையடுத்து அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய தேமுதிக 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆனந்தா நகரில் உள்ள பிஎம்பி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று தேமுதிகவின் பொதுக்குழு நடைபெற உள்ளது. இதில் விஜயகாந்த் கலந்துக்கொண்டு பொதுக்குழு உறுப்பினர்களுடன் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்க இருப்பதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நடைபெறும் தேமுதிக பொதுக்குழு தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.