தே.மு.தி.க வில் இருந்து வெளியேறிய சந்திரகுமாருக்கு தி.மு.க வில் கொள்கை பரப்பு இணை செயலர் பதவி வழங்கப்பட்டத்தை தொடர்ந்து அக்கட்சி தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

156

தே.மு.தி.க வில் இருந்து வெளியேறிய சந்திரகுமாருக்கு தி.மு.க வில் கொள்கை பரப்பு இணை செயலர் பதவி வழங்கப்பட்டத்தை தொடர்ந்து அக்கட்சி தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சட்டமன்ற தேர்தலில் போது சந்திரகுமார் தலைமையில் தே.மு.தி.க வில் இருந்து கூட்டாக வெளியேறிய பலர் மக்கள் தே.மு.தி.க என்ற கட்சியை நிறுவி தேர்தலை சந்தித்தனர். அதைத்தொடர்ந்து அந்த கட்சியை கலைத்துவிட்டு அனைவரும் கூட்டாக திமுக வில் இணைந்தனர். இந்த நிலையில் சந்திரகுமாருக்கு தி.மு.க வில் கொள்கை பரப்பு இணை செயலர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து சந்திரகுமார் தி.மு.க தலைவர் கருணாநிதியை அவரின் இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் பார்த்திபன் உடனிருந்தார்.