உள்ளாட்சி தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனித்தே போட்டியிடும், என பொருளாளர் இளங்கோவன் தெரிவித்து உள்ளார்

211

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்ட தேமுதிக கட்சி பெருத்த தோல்வியை சந்தித்தது. பின்னர், இக்கட்சியின் தலைவர் விஜயகாந்த நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், உள்ளாட்சி நிர்வாகிகள் தனித்து போட்டியிட விருப்பம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில், செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொருளாளர் இளங்கோவன், வரும் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக கட்சி தனித்துப் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன், அவர் தேமுதிக கட்சியின் தலைமையை ஏற்று வரும் கட்சிகளுடன், இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் கூறினார். சட்டமன்றத்தில், திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மக்களின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், மூத்த தலைவர் என்ற முறையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு தனி இருக்கை ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.