இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி | ஜோகோவிச், ஸ்பெயின் வீரரை வீழ்த்தி முன்னேற்றம்

270

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இத்தாலி நாட்டில் உள்ள ரோம் நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். ரவுண்ட் 16 எனப்படும் லீக் சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச், ஸ்பெயின் நாட்டின் பாடிஸ்ட்டா என்பவரை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், அதிரடியாக ஆடிய ஜோகோவிச், 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.