தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

இந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரயில்களில் வெளியூர் செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 2-ஆம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் இன்று முன்பதிவு செய்யலாம்.

தீபாவளி பண்டிகைக்கு ஒருவாரம் முன்பாகவே சொந்த ஊர்களுக்கு பலர் செல்வார்கள் என்பதால், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் 3-ம் தேதி பயணம் செய்வோர் ஜூலை 6-ம் தேதியும், நவம்பர் 4-ம் தேதி புறப்பட்டுச் செல்பவர்கள் ஜூலை 7-ம் தேதியும் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.