தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட ஆர்வம்..!

248

தீபாவளி சமயத்தில் இயக்கப்பட கூடிய ரெயில்களுக்கான முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி வரும் நவம்பர் 6ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து தொழில் நிமித்தமாக சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் தங்கியிருக்கும் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்ப திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் நவம்பர் 2ஆம் தேதி இயக்கப்படும் ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் பல்வேறு ரெயில்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன.

குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி, பொதிகை ரெயில்களின் டிக்கெட்டுகள் 10 நிமிடத்தில் காலியாகின. இதனிடையே தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு இந்தமுறை அதிகளவில் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.