அடுத்த தீபாவளிக்குள் ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும்- பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி நம்பிக்கை

326

அடுத்த தீபாவளிக்குள் ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அயோத்தி ராமஜென்ம பூமி மீது முஸ்லீம்கள் கோரிய சொத்து உரிமையை அலகாபாத் உயர்நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்து விட்டதாக சுட்டிக் காட்டினார். முஸ்லீம்கள் சொத்து உரிமையை மட்டுமே கோருவதாக கூறிய சுப்ரமணியன் சுவாமி, ஆனால் தாங்கள் ராமஜென்ம பூமியின் மீதான அடிப்படை உரிமையை கோருவதாக தெரிவித்தார். இதனால் சாதாரண சொத்து உரிமையைவிட, அடிப்படை உரிமையை காரணம் காட்டி தங்கள் தரப்பு வெற்றுபெறும் என்று அவர் கூறினார். அடுத்த தீபாவளிக்கு ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும் என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.