தீபாவளிக்கு ஊருக்கு செல்ல பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம். கூடுதல் விமானங்களை இயக்கிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

322

தீபாவளிக்காக விமான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டதால், கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டதால், ஆம்னி பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வருகிறது. இந்தநிலையில் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடிக்கு செல்லும் விமானங்களுக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.
சென்னையில் இருந்து மதுரைக்கு தினமும் 8 விமானங்களும், திருச்சிக்கு 4 விமானங்களும், தூத்துக்குடிக்கு 2 விமானங்களும் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களில் 2 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்பனை ஆகி விட்டதால், பண்டிகை காலத்தில் கூடுதல் விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.