தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனையாகும் கருப்பட்டி அல்வா ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் மக்கள் !

647

தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லை மாவட்டம் திசையன்விளையில் கருப்பட்டி அல்வா விற்பனை களை கட்டியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் தயாராகும் கருப்பட்டி அல்வா, தனி சிறப்பை பெற்றுள்ளது.ice_screenshot_20171018-143524 கருப்பட்டி, கோதுமை, பால், முந்திரி, தேங்காய் பால் , சுக்கு உள்ளிட்டவை கொண்டு தயாரிக்கப்படுகிறது. பொதுவாக பண்டிகை நாட்களில் இங்கு தயாரிக்கப்படும் அல்வா, அதிகளவில் விற்பனையாகும். ஒரு மாதம் வரை கெட்டுபோகாமல் இருப்பதால், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் எடுத்துச் செல்கின்றனர். இந்த கருப்பட்டி அல்வாவை சர்க்கரை நோயாளிகள் கூட விரும்பி சாப்பிடலாம் என்பதால் தீபாவளி போன்ற விழாக்களில் இனிப்புக்கு பதிலாக கருப்பட்டி அல்வாice_screenshot_20171018-143510வை மக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.