திவாகரன், தினகரன் அதிமுகவுக்காக என்ன தியாகம் செய்து இருக்கிறார்கள் என்று கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ ஆறுக்குட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

357

திவாகரன், தினகரன் அதிமுகவுக்காக என்ன தியாகம் செய்து இருக்கிறார்கள் என்று கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ ஆறுக்குட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திவாகரன், தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினருக்கு இனி அதிமுகவில் இடம் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்தார். ஜெயலலிதா மரணம் அடையக் காரணமே சசிகலா குடும்பம் தான் பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய அவர், பொதுக்குழுவை கூட்டும் போது ஆதரவு யாருக்கு என்பது தெரியவரும் என கூறினார்.
திவாகரன், தினகரன் ஆகியோர் அதிமுக கட்சிக்காக போராட்டம் நடத்தி, சிறைவாசம் அனுபவித்துள்ளார்களா என கேள்வி எழுப்பிய ஆறுக்குட்டி, அதிமுக குறித்து கருத்து தெரிவிக்க திவாகரனுக்கு தகுதி இல்லை என திட்டவட்டமாக கூறினார்.