சசிகலாவை சகோதரி என இனி அழைக்க மாட்டேன் – திவாகரன்

1187

சசிகலாவை சகோதரி என்று இனி அழைக்க மாட்டேன் என்றும், நோட்டீஸ் அளித்ததால் அரசியல் பயணம் நின்றுவிடாது என்றும் திவாகரன் தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் உறவினர்களான திவாகரன், தினகரனுக்கும் இடையே இருந்த கருத்துவேறுபாடு முற்றி, இரு தரப்பினரும் மாறி மாறி குற்றங்களைச் சுமத்தி வருகிறனர். இதனிடையே சசிகலா என்ற தனது பெயரையோ அல்லது புகைப்படத்தையோ அரசியல் காரணங்களுக்காக திவாகரன் பயன்படுத்தக் கூடாது என்றும், சசிகலா தரப்பில் திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மன்னார்குடியில் திவாகரன் விளக்கம் அளித்தார். அப்போது சசிகலாவை சகோதரி என இனி அழைக்க மாட்டேன் என குறிப்பிட்ட அவர், என்னுடைய முன்னாள் சகோதரி என்றார். மேலும் சசிகலா நோட்டீஸ் அளித்ததால் அரசியல் பயணம் நின்று விடாது என்றும், அம்மா அணி என்ற பெயரில்தான் செயல்படுவோம் என்றும் திவாகரன் உறுதிப்பட தெரிவித்தார்.