ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் தன்னிடம் எந்த கேள்விகளும் கேட்கவில்லை : திவாகரன்

213

ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் தன்னிடம் எந்த கேள்விகளும் கேட்கவில்லை என அண்ணா திராவிடர் கழக தலைவர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தினகரன் மன்னார்குடி கூட்டத்துக்கு ஆர்.கே நகர் போன்றே குக்கர் கொடுப்பதாக கூறி டோக்கன் கொடுத்து ஆட்களை அழைத்து வந்துள்ளதாக குற்றம்சாட்டினார். தாம் எந்தத் தேர்தலிலும் போட்டியிடப்போவது இல்லை என தெரிவித்த அவர், கட்சி நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றார்.

பொன்.மாணிக்கவேல் ஒரு நேர்மையான அதிகாரி என்றும், சிலைக்கடத்தல் வழக்கை ஏன் சி.பி.ஐ-க்கு மாற்றுகிறார்கள் என்று தெரியவில்லை எனவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய திவாகரன், ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் தன்னிடம் ஜெயலலிதா மரணம் குறித்து எந்த கேள்வியையும் கேட்கவில்லை என அவர் தெரிவித்தார்.