headline
விழுப்புரம் – திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் தேங்கிய மழை நீர். டெங்கு பரவும் அபாயம்.நோயாளிகள் அவதி*** சிவகங்கை-தேவக்கோட்டை ராம் நகரில் பன்னிர் செல்வம் என்பவர் வீட்டில் கொள்ளை முயற்சி. நகை, பணம் கிடைக்காததால் டி.வி, மிக்ஸி உள்ளிட்ட பொருட்களை தீ வைத்து சேதப்படுத்தியுள்ளனர்*** தருமபுரி-பாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்த முனிராஜ் என்பவர் கைது. 70மது பாட்டில் பறிமுதல் செய்து மாரண்டஹள்ளி போலீசார் நடவடிக்கை*** தருமபுரி-எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு துறை சார்பில்,தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமானோர் பங்கேற்பு*** திண்டுக்கல்-பழனி உழவர்சந்தை அருகே மல்லிகா என்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 6 பவுன் செயினை பறித்துச் சென்றனர்*** திண்டுக்கல்-திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மோதியதில் திண்டுக்கல் நகர் காவல்நிலையத்தில் துப்புரவு பணிபுரிந்த முனியம்மாள் (55)சம்பவ இடத்திலேயே பலி*** கன்னியாகுமரி-நாகர்கோவில்-கன்னியாகுமரி மாவட்ட சுற்றுப்புறத்தையும் , சுகாதாரத்தையும் பேணிகாத்து டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து மர்மநோய்களையும் ஒழிக்க துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசையும்,சுகாதாரத்துறையையும் ,மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்தி இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்*** புதுகோட்டை-பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு புதுக்கோட்டை மாவட்ட சாலையோர வியாபாரிகள், விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரவை பொதுக்கூட்டம் நடைபெற்றது*** புதுகோட்டை-பொன்னமராவதி ஒன்றியம் எம்.உசிலம்பட்டியில் அழகர்சாமி என்பவரது வீட்டில் கோழியை விழிங்கிய மலைப்பாம்பை பொதுமக்கள் பிடித்து சடையம்பட்டி மலை பகுதியில் விட்டனர்*** வேலூர்-ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த லாரியை தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி வட்டாட்சியர் முரளிகுமார் பறிமுதல் செய்தார்*** வேலூர்-திருப்பத்தூரில் ஓடும் லாரியில் வாலிபர் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பலி*** வேலூர்-குடியாத்தம் அருகே டைலர் பாபு என்பவரின் வீட்டின் கதவை உடைத்து 10 சவரன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ.75 ஆயிரம் பணம் பட்டபகலில் கொள்ளை*** திருவாரூர்-திரூவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா நெம்மேலி கிராமத்தில் வீடுகள் இடிந்து விழும் அபாயம் .100 மேற்பட்ட மக்களை அரசு பள்ளியில் தங்க வைக்க ஆட்சியர் அறிவிப்***பு திருவாரூர்-தொடர்ந்து 4 நாட்களாக பெய்து வரும் கனமழையால் திரூவாரூர் ,நன்னிலம்,திருத்துறை பூண்டி ஆகிய பகுதிகளில் 3000 -க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிப்பு*** திருவண்ணாமலை -திருவண்ணாமலை அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் கண் பார்வையற்ற சிறுமி வினோதினி(8) மர்மமான முறையில் மரணம். போலீசார் விசாரணை *** திருவண்ணாமலை -திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் தடுக்கும் விதமாக குருதி பகுப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்*** திருவண்ணாமலை -சேத்துப்பட்டு பேருராட்சிக்கு உட்பட்ட நபி நாயகம் தெருவில் மழை நீர் தேங்கி உள்ளதால் கால்வாய் அமைப்பதற்கான ஆக்கிரமிப்புகளை செயல் அலுவலர் முகமது இப்ரகாஹிம் தலைமையில் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் நடைபெற்றது*** திருவள்ளூர்-திருத்தணி, அருங்குளம் ஆகிய பகுதிகளில் சுகாதாரப்பணிகளை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி ஆய்வு செய்தார்*** திருவள்ளூர்-திருத்தணி முருகன் கோவிலில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி குடும்பத்துடன் சாமி தரிசனம்*** திருச்சி-திருச்சி கே.கே.நகர் அய்யப்ப நகர் சாஸ்தா தெருவில் வசித்து வரும் நாகராஜன் என்பவர் வீட்டில் நேற்று இரவு 15 பவுன் நகை ,ரூ. 7000 கொள்ளை*** நாகை-கும்பகோணம், திருவிடைமருதூர் மற்றும் குத்தாலம் உள்ளிட்ட நாகை மாவட்டத்தில் கனமழை எதிரொலி ,சம்பா சாகுபடிக்கு கும்பகோணத்தில் இருந்து காவிரி மற்றும் வீர சோழன் ஆறு, மஞ்சளாறு, மகி மழையாறு ஆகிய ஆறுகளுக்கு திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது*** நெல்லை-பாளையங்கோட்டை கே.டி.சி நகரை சேர்ந்த ராஜேஷ் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2ம் தேதி பயிற்சியின்போது மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யபடுகிறது*** நெல்லை-நெல்லை வண்ணார்பேட்டை தனியார் நிறுவத்தினை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு. கொசு புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கவும் , தூய்மை பணிகளை முடிக்கும் வரை சீல் வைக்கவும் மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவு*** திருப்பூர்-திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் செயல்படும் பெண்கள் காப்பகத்திலிருந்து வழக்கு விசாரணைக்காக தங்க வைக்கப்பட்டிருந்த 3 சிறுமிகள் தப்பி ஒட்டம். காப்பக நிர்வாகி அளித்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 சிறுமிகளையும் தேடி வருகின்றனர்*** கோவை-மேட்டுப்பாளையம் அரசு பள்ளிகளில் 478 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை சட்ட மன்ற உறுப்பினர் ஒ.கே.சின்னராஜ் வழங்கினார்*** கோவை-கோவை சின்னத்தடாகம் பகுதியில் காட்டுயானை வழி தவறி ஊருக்குள் வந்ததால் பரபரப்பு*** கோவை-பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடையில் இன்று அதிகாலை மீண்டும் காட்டு யானை அட்டகாசம்.வேலுச்சாமி என்பவரது வீட்டை சேதப்படுத்தி பீரோ உள்ளிட்ட பொருட்களை உடைத்தது காட்டு யானை*** புதுச்சேரி -காரைக்காலில் விடாமல் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு *** கிருஷ்ணகிரி -ஓசூர் ராம்நகர் பகுதியில் சார் ஆட்சியர் சந்திரகலா டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொண்டார்*** ராமநாதபுரம் -முதுகுளத்தூர்,கடலாடி பகுதிகளில் விளை நிலங்களில் 10-க்கு அதிகமான மின் கம்பங்கள் சாய்ந்து கிடைப்பதால் விவசாயிகள் அச்சம். சீரமைத்து மின் விநியோகம் செய்ய விவசாயிகள் கோரிக்கை. மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்*** ராமநாதபுரம் -கமுதி அருகே மனநோயால் பாதிக்கப்பட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் மாணிக்கம் (72) விஷம் குடித்து தற்கொலை*** காஞ்சிபுரம் -மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சாமுவேல் (28) நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலே பலி மதுராந்தகம் போலிசார் விசாரணை*** காஞ்சிபுரம் -காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் அடுத்த வாரணாவாசி பகுதியில் தனியார் நிறுவனத்தின் ஊழியர்களை ஏற்றி சென்ற வேன் தடுப்பு சுவற்றில் மோதி 15 பேர் பலத்தகாயம். 4 பேருக்கு கை,கால் உடைந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதி.இது குறித்து போலீசார் விசாரணை *** காஞ்சிபுரம் -திருக்கழுக்குன்றம் அருகே கோரப்பட்டு பகுதியில் கூலி தொழிலாளி கன்னியப்பன் (70) தனது குடிசை வீட்டில் படுத்து கொண்டிருந்த போது திடீரென வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில் ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி***

சென்னை

ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான புதிய பாடத்திட்டம் இணைய தளத்தில் பதிவேற்றம்...

இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள புதிய பாடத்திட்டம் தொடர்பாக, கல்வியாளர்கள்மற்றும் பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாடத்திட்ட வரைவை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்....

உலக பாரம்பரிய தினத்தையொட்டி, மாமல்லபுர சிற்பங்களை இலவசமாக பார்வையிடலாம்!

உலக பாரம்பரிய தினத்தையொட்டி, மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை 25ம் தேதி வரை இலவசமாக பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பாரம்பரிய வாரம் நவம்பர் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது....

கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்-அமைச்சர் ஜெயக்குமார்!

தமிழக அரசு மீது ஆதாரம் இல்லாமல் தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவித்து வரும் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக அரசு மீது...

மதுரை

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது!

ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து மீண்டும் அட்டூழியத்தில் ஈடுப்பட்டுள்ளனர். தமிழக எல்லையான கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் 2 விசைப்படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு...

வேலூர்

திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த மர்ம நபர்கள்!

திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவனை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த தாதனவலசை பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் கோவிந்தன். தனியார் பள்ளியில்...

கோவை

அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் ஆய்வுக் கூட்டம் நடத்தியது மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல் -மு.க.ஸ்டாலின்!

கோவையில் அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் ஆய்வுக் கூட்டம் நடத்தியது மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்யுள்ளார். மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழா கோவையில் நடைபெற்றது....

சேலம்

சேலத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பெண் கலெக்டரை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

சேலத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பெண் மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி டெங்கு விழிப்புணர்வு குறித்து...

கடலூர்

பழைய கொள்ளிடம் ஆற்றில் முதலைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் !

பழைய கொள்ளிடம் ஆற்றில் முதலைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழையினால் சிதம்பரம் அருகே உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது....

நெல்லை

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியால், கையை கூடக் ஊன்ற முடியாது- மு.க. ஸ்டாலின்!

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியால், கையை கூடக் ஊன்ற முடியாது என்று, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் திமுக பிரமுகர் இல்லத் திருவிழாவில் கலந்து கொண்ட அவர்...

திருச்சி

தமிழகத்தை அதிமுகதான் நிரந்தரமாக ஆட்சி செய்யும் -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தை அதிமுகதான் நிரந்தரமாக ஆட்சி செய்யும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்துள்ளார். சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கலைக்கல்லூரி மைதானத்தில் அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,...