சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல் …!

219

சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், உயரமான இடங்களுக்கு செல்லுமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில், பருவமழை காரணமாக, சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வெள்ள நீரில் நடந்து செல்லுபவர்கள், கட்டாயம் காலணிகளை அணிந்து செல்ல வேண்டும் என்றும், சென்னையில், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் உயரமான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரங்களும் அரசு அதிகாரிகள் பணியில் உள்ளதாகவும் அவசர தேவைக்கு 1913 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.