பிரபல திரைப்பட இயக்குனர் ஐ.வி.சசி சென்னையில் காலமானார்….!

576

பிரபல திரைப்பட இயக்குனர் ஐ.வி.சசி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69.
1948ஆம் ஆண்டில் கேரளாவில் பிறந்த ஐ.வி.சசி, கடந்த சில தினங்களாக உடல் நலமின்றி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். அலாவுதீனும் அற்புதவிளக்கும், குரு, ஒரேவானம் ஒரே பூமி உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஐ.வி.சசி.

மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களை இயக்கிய ஐ.வி.சசி, தாம் இயக்கிய அவளோடு ராவுகள் படத்தில் நடித்த சீமாவை திருமணம் செய்து கொண்டார். ஐ.வி.சசி – சீமா தம்பதிக்கு அனு, அனி என்ற 2 மகள்கள் உள்ளனர். சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள ஐ.வி.சசி உடலுக்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.