அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், நேரடியாக இரண்டாம் ஆண்டு விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்படுகிறது.

1059

அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், நேரடியாக இரண்டாம் ஆண்டு, டிப்ளமோ படிப்பில் சேர, இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.

நடப்பு கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சியுடன், இரண்டு ஆண்டு ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், நேரடியாக இரண்டாம் ஆண்டு, டிப்ளமோ படிப்பில் சேர்வதற்கான வசதியுள்ளது.
இதற்கான விண்ணப்ப படிவங்கள், இன்று முதல், ஜூன் ஒன்றாம் தேதிவரை வழங்கப்படுகின்றன.
இதேபோல, சென்னை தரமணியில் உள்ள, மத்திய பாலிடெக்னிக் கல்லுாரியில் நடத்தப்படும், இரண்டரை ஆண்டு செயற்கை அவயங்கள் மற்றும் முடநீக்கியியல் டிப்ளமோ படிப்பிற்கான விண்ணப்பங்களும் வழங்கப்படுகின்றன.
மேலும், டாக்டர் தர்மாம்பாள் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில், ஓராண்டு ஒப்பனைக்கலை பட்டயப்படிப்பிற்கான, மாணவர் சேர்க்கையும் நடைபெற உள்ளது.
விண்ணப்பங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், 150 ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளலாம் என, உயர் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் ஒன்றாம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.