80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் கால் தடத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

256

80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் கால் தடத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பொலிவியாவின் சோர் நகரிலிருந்து 64 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள களிமண்ணில் இந்த டைனோசரின் கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்ட அர்ஜென்டினாவை சேர்ந்த தொல்லியல் துறையினர், கண்டுபிடிக்கப்பட்ட டைனோசரின் கால் தடம் 1.2 மீட்டர் நீளமுடையது என்று தெரிவித்தனர். இதன் கால் தடங்களை வைத்து பார்த்ததில், டைனோசர், மற்ற விலங்குகளை வேட்டையாடி சாப்பிடக் கூடிய வகையாக இருந்திருக்கலாம் என்றும் கூறினர். சுற்றுலா தளங்களில் ஒன்றாக கருதப்படும் சோர் பகுதியின் பல்வேறு இடங்களில் முன்னதாக டைனோசரின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி இங்குள்ள டைனோசர் பூங்கா சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது.