உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

384

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி கருவேல மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது பேசிய, வேளச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர், மதுரை, தேனி, இராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார். கருவேல மரங்களை அகற்ற அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில்படி கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும், கருவேல மரங்கள் அமைந்துள்ள இடங்களில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.