தமிழகத்தில் வறட்சி காரணமாக உயிரிழந்த விவசாயிகளின் குடும்பகளுக்கு தலா 3 லட்சம் நிவாரணத்தொகை விரைவில் வழங்கப்படும்

79

தமிழகத்தில் வறட்சி காரணமாக உயிரிழந்த விவசாயிகளின் குடும்பகளுக்கு தலா 3 லட்சம் நிவாரணத்தொகை விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் விழா திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பரிசு பொருட்களை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சீனிவாசன், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதற்காக 3200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், வறட்சி காரணமாக உயிரிழந்த 17 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.