ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலினின் பகல் கனவு நனவாகாது : திண்டுக்கல் சீனிவாசன்

246

குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் மு.க.ஸ்டாலினின் எண்ணம் பகல் கனவாக முடியும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து அவர், இரு அணிகள் இணைப்புக்கு தாங்கள் தயாராக உள்ளதாகவும், தங்களிடம் எந்தவித நிபந்தனைகளும் இல்லை என்றும் தெரிவித்தார். இரு அணிகளும் இணக்கமாக உள்ளதாக கூறிய அவர், இது குறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பொய்யான தகவல்களை தெரிவித்து வருவதாக குற்றம்சாட்டினார். குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கலாம் என்ற ஸ்டாலின் பகல் கனவு பலிக்காது என்று திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.