காவல் நிலையம் அருகே வாலிபர் ஓட ஓட விரட்டி கொலை..!

449

திண்டுக்கல் தெற்கு காவல் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம் குடைபாறைபட்டியை சேர்ந்த குமரேசன் தெற்கு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக சென்றிருந்தார். பின்னர் காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்த குமரேசனை மர்ம கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களால் விரட்டியது. உயிர் பிழைக்க அவர் செய்த முயற்சிகள் பயனளிக்கவில்லை. காளியம்மன் கோவில் அருகே மர்ம கும்பல் குமரேசனை வெட்டி சாய்த்தது. காவல் நிலையம் முன்பு நடந்த இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.