திண்டுக்கல் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

272

திண்டுக்கல் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கொடைக்கானலைச் சேர்ந்த அருளப்பன், ஜேசுராஜ், மைக்கேல் மற்றும் சகாயராஜ் ஆகியோர் காரில் சிவகாசிக்கு சென்று விட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். இன்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் அம்மைநாயக்கனூர் அருகே சென்ற போது, சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது. இதில், காரில் பயணம் செய்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்