தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் திண்டுக்கல்லில் நடைபெற்றது.

276

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் திண்டுக்கல்லில் நடைபெற்றது.

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப துறையும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து ஆண்டுதோறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்துகின்றன. இந்த ஆண்டு அறிவியல் தொழில்நுட்பம் புதுமை, இவற்றில் நீடித்த நிலையான வளர்ச்சி என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது. 6 முதல் 8ஆம் வகுப்பு, 9 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை தேர்வு செய்து ஒரு பள்ளியில் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. அந்த வகையில், போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் திண்டுக்கல்லில் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களால் உருவாக்கப்படும் ஆய்வு கட்டுரைகள் தேர்வு குழுக்களுக்கு அனுப்பப்பட்டு, அதில் தேர்வு செய்யப்படும் சிறந்த கட்டுரைக்கு குழந்தை விஞ்ஞானி விருது வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.