வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் தொகுதி வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

353

திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சீனிவாசன் வனத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனை தொடர்ந்து திண்டுக்கல் தொகுதியில் தன்னை வெற்றி பெறச் செய்த வாக்களர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றார். மேட்டுப்பட்டி, மொட்டனம்பட்டி சாலை, பூச்சி நாயக்கன்பட்டி, முத்தழகுபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்களர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசிய போது கடந்த 2011-ஆம் ஆண்டில் முதலமைச்சரான ஜெயலலிதா மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் தான் மீண்டும் தன்னை மக்கள் தேர்வு செய்ததாக குறிப்பிட்டார். இந்த தேர்தலிலும் முதலமைச்சர் ஜெயலலிதா மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தான் பாடுபடப் போவதாகவும் அப்போது அவர் மேலும் கூறினார்.