விலை வாசி உயர்வைக் கண்டித்து திண்டுக்கல்லில் இளைஞர் காங்கிரஸ்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

280

திண்டுக்கல்: அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து, இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் மணிகண்டன் தலைமையில் திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல், பருப்பு, வெங்காயம், தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. விலைவாசி உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் எனவும், இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இளைஞர் காங்கிரசார் குற்றம்சாட்டினர். ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரசார் மற்றும் மகளிர் அணியினர் பங்கேற்றனர்.