மகாத்மாவை கொன்ற கோட்சே அமைப்பை சேர்ந்த மோடியை துரத்த வேண்டும்..!

121

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே அமைப்பை சேர்ந்த மோடியை பதவியை விட்டு துரத்த வேண்டும் என பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வேலுச்சாமிக்கு வாக்கு கேட்டு பழனி பெரியார் திடலில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மகாத்மா காந்தி இருக்கும் இடத்தையே கோவிலாக மதித்தவர். ஆனால் கோவிலுக்கு மோடிக்கு அடிமையாக செயல்படும் எடப்பாடி ஆட்சியை விரட்டியடிக்க திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.