திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகத்தின் சார்பில், மூத்த கால்பந்து வீரர்கள், பரிசுத் தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது.

232

திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகத்தின் 29-வது ஆண்டு விழா, தமிழ்நாடு கால்பந்து கழக துணை தலைவர் சுந்தரராஜன் தலைமையில் திண்டுக்கல்லில் நடைபெற்றது.

விழாவில், மூத்த விளையாட்டு வீரர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், நினைவுப் பரிசும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மாநில மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற வீர- வீராங்கனைகளுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. மேலும் இந்திய அளவில் சிலம்பாட்டத்தில் முதலிடம் பெற்ற பூஜா மோகனுக்கு 5 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, மறைந்த மூத்த கால்பந்து வீரர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.