தினகரனின் மேலூர் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

406

மேலூரில் நடைபெற உள்ள தினகரன் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அதிமுக தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்ட, தமிழகம் முழுவதும் டி.டி.வி தினகரன் சுற்றுபயணம் மேற்கொள்கிறார். முதற்கட்டமாக மதுரை மாவட்டம் மேலூரில் 14 ஆம் தேதி தினகரன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு அனுமதி அளிக்குமாறு அதிமுக அம்மா அணி நகர செயலாளர் சரவணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவசர மனு தாக்கல் செய்தார். இன்று விசாரணைக்கு வந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, மேலூர் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.