தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தினகரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு!

561

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தினகரன் உள்ளிட்ட 20 பேர் மீது தண்டையார்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. சுயேட்டை வேட்பாளராக களமிறங்கும் தினகரன் தண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அப்போது, தினகரன் அதிகஅளவில் வாகனங்களுடன் சென்றதாக புகார் எழுந்தது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தினகரன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் 20 பேர் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவினர் அளித்த புகாரிள் அடிப்படையில் தினகரன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.