தினகரன் ஆதரவு எம்பி-க்கள் 3 பேர்இன்று முதலமைச்சரை சந்தித்து ஆதரவு!

344

தினகரன் ஆதரவு எம்பி-க்கள் 3 பேர் நேற்று அணி மாறிய நிலையில், தற்போது மேலும் 2 எம்பிக்கள் முதலமைச்சரை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் அதிமுகவின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி வரும் 5ம் தேதி சென்னையில் அமைதி ஊர்வலம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
இதனிடையே, தினகரன் ஆதரவு எம்பிக்கள், நவநீத கிருஷ்ணன், விஜிலா சத்யானந்த் மற்றும் புதுச்சேரி கோகுல கிருஷ்ணன் ஆகியோர் நேற்று திடீரென முதல்வர் இல்லத்திற்கு வருகை தந்தனர். முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்து கொண்டனர்.
இந்தநிலையில், தினகரன் ஆதரவு எம்பி-க்கள் வேலூர் செங்குட்டுவன், திண்டுக்கல் உதயக்குமார் ஆகியோர் முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். தன்னிடம் கூறிவிட்டு தான் எம்பிக்கள் அணிகள் மாறியதாக தினகரன் கருத்து தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.