இரட்டை இலை சின்னம் பெறுவது தொடர்பாக தினகரனின் கோரிக்கை மனு நிராகரிப்பு!

394

இரட்டை இலை சின்னம் பெறுவது தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய காலஅவகாசம் கேட்டு விண்ணப்பித்த டிடிவி தினகரனின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிகாரித்துள்ளது.
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணை வரும் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான கூடுதல் ஆவணங்களை 29-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இந்நிலையில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டு தினகரன் அணியினர் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்தனர். 15 நாட்கள் அவகாசம் தேவை என்று தினகரன் தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இந்த மனுவை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், தினகரனின் மனுவை நிராகரித்தது. திட்டமிட்டப்படி அக்டோபர் 6-ம் தேதி மாலை 3 மணிக்கு இறுதி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.