தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று டெல்லி பயணம் குடியரசுத்தலைவரை சந்தித்து பேச திட்டம்!

353

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறையிடுவதற்காக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொண்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 20 பேர் புதுச்சேரியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளனர். ஆதரவை விலக்கி கொண்டது தொடர்பான கடிதத்தை அளித்து ஒரு வாரம் ஆகியும் ஆளுநர் வித்யாசகர் ராவிடம் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து, மீண்டும் சந்திப்பதற்காக அவரிடம் நேரம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், ஆளுநர் வித்யாசாகர் ராவ் இதற்கு அனுமதி மறுத்துவிட்டார். ஆளுநர் சந்திக்க
அனுமதி மறுத்ததையடுத்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து முறையிட அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக புதுச்சேரியிலிருந்து சென்னை திரும்பும் அவர்கள் அங்கியிருந்து விமானம் மூலம் இன்று டெல்லி சென்று குடியரசுத்தலைவரை சந்தித்து பேசுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.