தினகரன் வீட்டில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று சென்னைக்கு வருகின்றனர்

446

தினகரன் வீட்டில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று சென்னைக்கு வருகின்றனர்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று போர்க்கொடி தூக்கிய தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் புதுச்சேரியில் ஒரு சொகுசு விடுதியில் தங்கியிருந்தனர். தொகுதிப் பணிகளை கவனிக்காமல் அவர்கள் அங்கு சொகுசு விடுதியில் தங்கியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்நிலையில், 10 எம்.எல்.ஏக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் தொகுதிப் பணிகளை மேற்கொள்வதற்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளதாகக் கூறப்பட்டது. இதனிடையே இன்று நடைபெறவுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்குமாறு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னையிலுள்ள தினகரன் வீட்டில் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் கலந்துக் கொள்வதற்காக 19 பேரும் இன்று சென்னைக்கு வரவுள்ளனர்.