பதவியில் இருந்து நீக்க தினகரனுக்கு எந்த தகுதியும் இல்லை-அமைச்சர் கே.சி. வீரமணி!

528

அதிமுக பொதுக்குழுவை விரைவில் கூட்டி சசிகலாவை நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று, அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்துள்ளார்.
வேலூரில் வரும் 9ம் தேதி நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட பிறகு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்குவதற்கு தினகரனுக்கு எந்த தகுதியும் இல்லை என கே.சி வீரமணி குறிப்பிட்டார். தினகரன் துணை பொதுச்செயலாளர் என்று கூறி வருவது, நடிகர் வடிவேலு கூறுவதை போல காமெடியாக இருப்பதாக அவர் தெரிவித்தார். விரைவில் பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் கே.சி வீரமணி கூறினார்.