கடவுளை தவிர வேறு யாரும் தங்களை மிரட்ட முடியாது என தினகரன் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.!

278

கடவுளை தவிர வேறு யாரும் தங்களை மிரட்ட முடியாது என தினகரன் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது தியாகத்துக்கும், துரோகத்துக்கும் இடையே யுத்தம் நடைபெறுவதாக கூறினார். பயத்தின் காரணமாக தமது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரும் புதுச்சேரியில் தங்கியிருக்கவில்லை என்று தெரிவித்த தினகரன், கடவுளை தவிர வேறு யாரும் தங்களை மிரட்டி பணியவைக்க முடியாது என்று தெரிவித்தார். சிறந்த சட்ட வல்லுநராக ஆளுநர் தங்கள் கோரிக்கை குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவதாக தினகரன் கூறினார்.