அக்டோபர் நான்காம் தேதிவரை தினகரனை கைதுசெய்ய தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை!

345

அக்டோபர் நான்காம் தேதிவரை தினகரனை கைதுசெய்ய தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
டிடிவி தினகரன் மற்றும் நடிகர் செந்தில் ஆகியோர் பேட்டி மூலம் தனக்கு மிரட்டல் விடுப்பதாக திருச்சி எம்.பி. குமார் புகார் தெரிவித்தார். இதனையடுத்து, அவர்கள் இருவர் மீது திருச்சி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை ரத்துசெய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடிகர் செந்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தங்களது மீது போலியான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தினகரன் மற்றும் செந்தில் ஆகிய இருவரையும் அக்டோபர் மாதம் நான்காம் தேதிவரை கைதுசெய்ய தடை விதித்து உத்தரவிட்டது.