தினகரன் பண்ணை வீட்டில் வருமானவரித்துறை மீண்டும் சோதனை !

408

புதுச்சேரியில் உள்ள டிடிவி தினகரன் பண்ணை வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அன்றைய தினம் புதுச்சேரி ஆரோவில்லில் உள்ள டிடிவி தினகரன் பண்ணை வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் தினகரன் பண்ணை வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த முறை சோதனையின் போது சீல் வைக்கப்பட்ட அறையை திறந்து ஆய்வு செய்து வருகின்னறனர்.