அமமுக-வுக்கு எதிர்ப்பு வலுப்பதால் தினகரன் கலக்கம்.. 5ஆம் தேதி சசிகலாவை சந்திக்க தினகரன் திட்டம்.

1966

தன்னுடைய கட்சிக்கு உறவினர்களே எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சசிகலாவை சந்திக்க தினகரன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சி மீது ஏற்கனவே அவரது ஆதரவாளர்களே அதிருப்தியில் இருக்கும் நிலையில் தற்போது திவாகரனும் அவரது மகன் ஜெய் ஆனந்தும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். தினகரனுடன் இனிமேல் இணைந்து செயல்பட முடியாது என திவாகரன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில்,நாளை மறுநாள் பெங்களூரு செல்லும் தினகரன், சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சந்தித்துப் பேசுகிறார். குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்களைத் தீர்க்கும் வகையிலும், தொண்டர்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல் வழங்கும் வகையிலும், அன்றைய தினம் சசிகலா சார்பில் அறிக்கை வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, மே 5ஆம் தேதி சசிகலா சார்பில் அதிரடி அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.